Posts

கனவு காணும் என் வாழ்க்கை

Image
கனவில் நிறைய  பேசினாய் என்னுடன் நிஜத்தில் ஏனோ ஒற்றை மெளனம்  காத்தாய். கனவில்  மடி கொடுத்தாய் என்  துயரங்களுக்கு நிஜத்தில் ஏனோ கருணை பார்வை மட்டும் பார்த்து சென்றாய். கனவில்  என் பக்கம்  நின்றாய் நிஜத்தில் ஏனோ தூரம் போனாய். கனவில் என்னுடன் தாமி (Selfi) எடுத்து கொ(ல்)(ள்)வாய் நிஜத்தில் ஏனோ என்னோடு குழு புகைப்படம் கூட எடுத்தது இல்லை காண்பவை எல்லாம் நிஜமாய் போக கனவே நீயும் ஓர் நாள் நிஜமாய் மாறு.

கண்ணீர்

கண்ணீரை தன்னில் இருந்தே எடுத்துக் கொள்கிறான். இல்லையெனில் உலகில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வற்றிபோயிருக்கும். 

இன்னும் சில நாட்கள்...

🍀  காலை நேரம்., அலுவலகத்திற்கு  கிளம்பியாக வேண்டும் நான். 🍀  செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம். அய்யோ.... 🍀  என்ன ஆயிற்று எனக்கு? 🍀  நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? 🍀  ஒரு நிமிடம் யோசிக்கிறேன்.... 🍀  நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன். 🍀  காபி வேண்டுமே, என் மனைவி எங்கே? மணி பத்தாகிவிட்டது 🍀  என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம். 🍀  அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான். 🍀  அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்...... 🍀  என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள். பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள். என் மனைவிக்கு சிலர் ஆறுதல் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள். 🍀  நான் இற

நீயே ஜெயிப்பாய்

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள், தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்...... * வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும். * தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும். * ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது. * ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும். * எது அந்த தவளையை கொன்றது...? * பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள். * ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"...... * நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம். * ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள

சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???

சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம் என்பதில்தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம். தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்கு காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும் சொல்கிறார்கள். அது தவறு. அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். பலரும் இன்று குக்கரில் வேகவைத்த சாதம் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது. சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும். அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும். சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப்பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும். கொதிக்கக்கொதிக்க சோறு சாப்பிடக்கூடாது. மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும். அதே நேரம் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும். பழையமுது சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் நல்லதெம்புடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள். முதல் நாள் தண்ணீர் சாதத்தில் ஊற்றி, மறு நாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி,

நீ

Image
பூக்களின் வாசமா நீ காற்றின் முகவரியா நீ வண்ணத்து பூச்சிகளின் வர்ணங்களா நீ கடலினின் ஆழமா நீ வானத்தின் உயரமா நீ சுடும் வெய்யிலா நீ நடுங்கும் குளிரா நீ மனித படைப்பின் பிரம்மாண்டமா நீ எதிர் காந்தங்களின் பிணைப்பா நீ யார் நீ? இந்த நீ க்காக நான் எழுதிய நீ கவிதை இது

இது போதும்

Image
தேடி தேடி  அலைகிறேன் உன் போல் ஓர் அழகை உன் போல் ஓர் சிரிப்பை உன் போல் ஓர் அக்கரையை உன் போல் ஓர் பேரன்பை உன் போல் ஓர் கண்டிப்பை உன் போல் ஓர் ஊக்குவித்தலை விழியேரம் கண்ணீர் துளிகளோடு வெறுமையுடன் திரும்புகிறேன் மனதில் உன்னை பற்றிய ஆயிரம் ஆயிரம் நினைவுகளுடன் இது போதும் என்று ..