Posts

Showing posts from November, 2011

ரயிலில் பயணம் செய்ய இனி டிக்கெட் தேவையில்லை IRCTC புதிய அறிவிப்பு

இப்பொழுது பெரும்பாலானவர்கள் விரும்பி பயணிப்பது ரயில்களில் தான். விரைவாகவும் அதே செலவு குறைவாகவும் தொல்லை இல்லாமல் தூங்கி கொண்டே செல்லலாம் என்று அனைவரும் ரயிலில் செல்வதையே விரும்புகின்றனர். எந்த சிரமமும் இன்றி ஆன்லைனில் ட்ரெயின் டிக்கெட்டுக்களை பதிவு செய்யும் வசதியும் ரயில் பயணிகளுக்கு உள்ளது. இதன் மூலம் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்து பின்னர் நமக்கு கொடுக்கப்படும் E-Ticket(ERS)பிரிண்ட் எடுத்து கொண்டு சென்று விடலாம். பரிசோதகர் கேட்டால் அந்த E-Ticket (ERS)காட்டினால் போதும். இந்த முறை தான் இது வரை அனைவராலும் கடைபிடிக்கப் பட்டிருந்தது. இப்பொழுது ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு மேலும் ஒரு புதிய சலுகையாக இனி அந்த E-Ticket(ERS) பிரிண்ட் கூட எடுத்து செல்ல வேண்டாம். VRM (Virtual Reservation Message) எனப்படும் Screen Shot இருந்தாலே போதும். நீங்கள் டிக்கெட் பதிவு செய்து முடிந்ததும் வரும் E Ticket ஐ ஒரு Screen Shot எடுத்து உங்கள் மொபைலிலோ,லேப்டாப்பிலோ அல்லது ஐ-பேட் போன்றவற்றில் சேமித்து கொண்டால் போதும். டிக்கெட் பரிசோதகர் கேட்கும் பொழுது அந்த screen Shot மற்றும் உங்களுடைய ID Proof ஒரிஜின