Posts

Showing posts from August, 2010

வலி

Image
காலை எழுந்திருக்கும் போதே மனது சரியில்லை. குடித்த தேநீர் சூடில்லை. பத்திரிகை வரவில்லை குளிக்கையில் பாதியில் நீரில்லை. நேரமானதில் காலை உணவில்லை. அவசரத்தில் கைபேசி எடுக்கவில்லை. புகுந்து போகவில்லையென ஆட்டோக்காரன் ஏசியது உறைக்கவில்லை. அலுவலகத்தில் சொன்ன காலை வணக்கத்தில் உற்சாகமில்லை. வலைத் தொடர்பில்லாததால் வேலையில்லை. வேலை சேருமே என்ற பதைப்பில் பொறுமையில்லை. நைந்த மனதில் மதிய உணவும் செல்லவில்லை. கொடுத்த ஆணையை மறந்து எகிறும் அதிகாரியை எதிர்க்கத் துணிவில்லை. முடியாத இலக்கை நிர்ணயிக்கும்போது பொங்க முடியவில்லை. அவசரப் பணி இருந்தும் ஐந்து நாள் விடுமுறை கேட்பவனை அறையவில்லை. களைத்துச் சலித்து வீடு திரும்புகையில் உட்கார இடமில்லை. மௌனமாய் உணவுண்டு கண்மூடித் துயில முயல்கையில் நித்திரை வரவில்லை. மனது கேட்கிறது! எத்தனை முறை இப்படி இருந்திருக்கிறேன்? சுயநல உலகில் பர்கின்ஸன்ஸால் நினைவழிந்து கடந்தகாலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் ஊசலாடிய உணர்விலும் கூட‌ கடந்து போகையில் கை பிடித்து தவறாமல் என் வலியுணர்ந்து ஏனடா? ஏதோ மாதிரி இருக்கிறாய் என்று கேள்வியடுக்கிய என் அம்மாவுக்கு சலிப்பாய் சொன்ன பதில் எல்லாம் தெர

your antivirus working properly r not?

Image
உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?..ஒரே நொடியில் கண்டு பிடிக்கலாம் வாங்க. இணையம் மற்றும் சாதாரணமாக கணினி உபயோகிப்போருக்கு இருக்கும் பெரும் தொல்லை இந்த வைரஸ் (virus) .நிறைய பணம் குடுத்து வைரஸ் மென்பொருளை update செய்திருந்தாலும் சில சமயம் எப்படியாவது இந்த வைரஸ் நம் கணினியில் புகுந்து விடும் .நாம் instal செய்துள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது .கீழே உள்ள code(நீல நிறம் )ஐ copy செய்து notepad இல் இடவும் பின்பு அதை fakevirus.exe என save செய்யவும் X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்தால் நீங்கள் save செய்த இந்த கோப்பு உடனே delete செய்யப்பட்டு விடும் .அப்படி delete ஆகவில்லை என்றால் உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.

அம்மா கவிதை

Image
அன்பு அவள் மொழி ஆறுதல் அவள் வார்த்தை இன்முகம் அவள் முகவரி ஈடில்லாதது அவள் பாசம் உயர்வானது அவள் பண்புநலன் ஊக்கமளிப்பாள் உயர்வு பெற எதிரிக்கும் காட்டுவாள் கருணைமுகம் ஏமாற்றம் நிகழும்போதும் இன்முகம் ஐயங்களின் எல்கைக்கப்பால் அவள்ஆன்மா ஒற்றுமையே அவள் வேதம் ஓடம்போல்தான் கரைசேர்ப்பாள் நம்மை ஔரவமானது அவள் சக்தி அஃதே அவளே அம்மா. ஃஃஃ