Posts

Showing posts from October, 2017

சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???

சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம் என்பதில்தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம். தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்கு காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும் சொல்கிறார்கள். அது தவறு. அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். பலரும் இன்று குக்கரில் வேகவைத்த சாதம் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது. சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும். அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும். சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப்பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும். கொதிக்கக்கொதிக்க சோறு சாப்பிடக்கூடாது. மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும். அதே நேரம் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும். பழையமுது சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் நல்லதெம்புடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள். முதல் நாள் தண்ணீர் சாதத்தில் ஊற்றி, மறு நாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி,

நீ

Image
பூக்களின் வாசமா நீ காற்றின் முகவரியா நீ வண்ணத்து பூச்சிகளின் வர்ணங்களா நீ கடலினின் ஆழமா நீ வானத்தின் உயரமா நீ சுடும் வெய்யிலா நீ நடுங்கும் குளிரா நீ மனித படைப்பின் பிரம்மாண்டமா நீ எதிர் காந்தங்களின் பிணைப்பா நீ யார் நீ? இந்த நீ க்காக நான் எழுதிய நீ கவிதை இது

இது போதும்

Image
தேடி தேடி  அலைகிறேன் உன் போல் ஓர் அழகை உன் போல் ஓர் சிரிப்பை உன் போல் ஓர் அக்கரையை உன் போல் ஓர் பேரன்பை உன் போல் ஓர் கண்டிப்பை உன் போல் ஓர் ஊக்குவித்தலை விழியேரம் கண்ணீர் துளிகளோடு வெறுமையுடன் திரும்புகிறேன் மனதில் உன்னை பற்றிய ஆயிரம் ஆயிரம் நினைவுகளுடன் இது போதும் என்று ..

மண நாள் பரிசு

Image
மலை மலையாய் மல்லிகை பூ வேண்டாம் ஆயிரம் ஆயிரம் ரூபாயில் நகைகள் வேண்டாம் புது புது வண்ணத்தில் புடவைகள் வேண்டாம் கால்கள் வலிக்க கடைத்தெருவில் அலைய வேண்டாம் சிரிக்கவும் அழவும் வைக்கும் சினிமாக்கள் வேண்டாம் சுவைத்து உண்ண சிற்றுண்டிகள் வேண்டாம் சிலிர்க வைக்கும் தெய்வ தரிசனம் வேண்டாம் புது புது வரிகளில் கவிதைகள் வேண்டாம் அன்பாக அழத்தமாக என் கண்ணத்தில் ஒரு முத்தம் வை நாம் மணமான தினத்தில் அது போதும்.